தேசிய செய்திகள்

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன - பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட் + "||" + The love and treat of the Tamils is unique modi

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன - பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன - பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்
தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என பிரதமர் மோடி டுவிட்டரில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது  இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேபாளம் புறப்பட்டுச்சென்றார். இதையடுத்து,  பிரதமர் மோடி தனது டுவிட்டரில் 3-வது முறையாக தமிழில் பதிவிட்டு தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு நன்றி.   தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆற்றல்மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.