மாநில செய்திகள்

தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi leaves for Delhi after concluding the second informal summit with Chinese President Xi Jinping

தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
புதுடெல்லி,

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நேற்று (அக்.,11) மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, இன்று (அக்.,12) கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு இரு நாட்டு அதிகாரிகளுடனான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் சந்திப்பை முடித்துக் கொண்டு, சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து  தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு நன்றி.  தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில்,  2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு  பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.  சென்னையில் இருந்து வழியனுப்பும் போது பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி நினைவுப் பரிசு வழங்கினர்.