உலக செய்திகள்

இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி - சீன தூதர் சன் வெய் டாங் + "||" + wish to thank Indian Government and Tamil Nadu government for their gracious hospitality Sun Weidong

இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி - சீன தூதர் சன் வெய் டாங்

இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி - சீன தூதர் சன் வெய் டாங்
இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய் டாங் தெரிவித்துள்ளார்.
பிஜீங்,

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, இன்று கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு இரு நாட்டு அதிகாரிகளுடனான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் சந்திப்பை முடித்துக் கொண்டு, சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார். 

இதனையடுத்து 2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி என இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய் டாங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய் டாங்  டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி - சீன அதிபர் இடையிலான 2 வது முறைசாரா உச்சி மாநாடு ஒரு பெரிய வெற்றியாகும். 

இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சீனா-இந்தியா உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என பதிவிட்டுள்ளார்.