மாநில செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் + "||" + Edappadi Palanisamy 3 days election campaign

விக்கிரவாண்டி தொகுதியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல்  நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு
வேட்டை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

முதற்கட்டமாக விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முண்டியம்பாக்கத்தில் பிரசாரத்தை தொடங்கி, ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி வி.சாத்தனூர்,  டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

2-ம் கட்டமாக 16-ந் தேதி மாலையில் காணை பகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார். மாம்பழப்பட்டு, அரியலூர், திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

18-ந் தேதி  விராட்டிக்குப்பம், தும்பூர், அன்னியூர், கடையம் உள்பட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.