மாநில செய்திகள்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகளை மதுரையில் விற்ற சுரேஷ் + "||" + Suresh sells Trichy Lalitha jewelery at Madurai

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகளை மதுரையில் விற்ற சுரேஷ்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகளை மதுரையில் விற்ற சுரேஷ்
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளை சுரேஷ் மதுரையில் விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந்தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகன சோதனையில் பிடிபட்ட மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளை கும்பல் தலைவனான முருகன் மற்றும் கூட்டாளி சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சுரேஷ் சரண் அடைந்தார். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கம் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று முருகன் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முருகன் நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வக்கீலுடன் பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அங்கு நீதிபதி நாகம்மா முன்னிலையில் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அப்போது நீதிபதியிடம், முருகன் மீது கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு பானசாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக அவர் சரண் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல் பானசாவடி போலீசாரும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையர்களான முருகன், சுரேஷ் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்து இருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.  தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ நகைகளை கொள்ளையன் சுரேஷ் மதுரையில் உள்ள வியாபாரி ஒருவரிடம் விற்று முன்பணமாக ரூ.7 லட்சம் பெற்றது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து அக்டோபர் 14ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சுரேஷை ஆஜர்படுத்தி காவலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் மீட்பு
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.
2. தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொன்று நகைகள் கொள்ளை
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொன்றுவிட்டு, 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
3. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: திருவாரூரில், மேலும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருவாரூரில் மேலும் 2 பெண்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
4. நூதன முறையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 12 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் 12 பவுன் நகைகள் திருட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. நாமக்கல்லில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
நாமக்கல்லில் நேற்று ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை