உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி + "||" + 4 dead and 3 wounded in today's Brooklyn shooting no arrests made

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
நியூயார்க்,

பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இல்லாததால், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் வேரூன்றி போய், அசைக்க முடியாதபடி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் படுகாயம்
அமெரிக்காவில் இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர்.