மாநில செய்திகள்

எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + AIADMK is fulfilling the dream of MGR and jayalitha - palanisamy

எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது -  எடப்பாடி பழனிசாமி பேச்சு
எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல்  நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர்.  

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு
வேட்டை நடத்தி வருகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். 

முதற்கட்டமாக விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-  

"எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது. உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது, அதிமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் அறிஞர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் அறிஞர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும், விருது பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.