தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை + "||" + PM Modi's niece robbed in Delhi, snatchers decamp with Rs 56,000 cash, mobiles

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை
பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் சகோதரரின் மகள் தமயந்தி பென் மோடி.  இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று காலை ஒரு வேலையாக சென்றுள்ளார்.  அங்குள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

இதற்காக பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லியின் வடக்கே சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோ ஒன்றில் சென்று இறங்கியுள்ளார்.  அவரை நெருங்கிய அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென அவரிடம் இருந்த பர்சை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.  இதனால் என்ன செய்வதென தெரியாமல் அவர் கூச்சலிட்டு உள்ளார்.

அந்த பர்சில் ரூ.56 ஆயிரம் பணம், 2 மொபைல் போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.  சம்பவம் நடந்த பகுதிக்கு சில கி.மீ. தொலைவிலேயே துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

அவர் மீண்டும் இன்று மாலை அகமதாபாத் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார்.  இதற்கிடையே திடீரென நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசில் தமயந்தி புகார் அளித்து உள்ளார்.  வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  சமீப காலங்களாக நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு: ஊரடங்கு நீடிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை
வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்துள்ளார்.
2. லடாக்கில் பதற்றம்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது.
4. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
5. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.