தேசிய செய்திகள்

ரூ.10-க்கு மதிய உணவு வழங்க 10 ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்படும் -சிவசேனாவின் தேர்தல் அறிக்கை + "||" + Shiv Sena Unveils Maharashtra Manifesto, Promises Rs 10 Meals

ரூ.10-க்கு மதிய உணவு வழங்க 10 ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்படும் -சிவசேனாவின் தேர்தல் அறிக்கை

ரூ.10-க்கு மதிய உணவு வழங்க 10 ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்படும் -சிவசேனாவின் தேர்தல் அறிக்கை
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில், சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை,

288 தொகுதிகளுக்கான மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.


இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், “ஏழை மக்களுக்கு மதிய உணவை ரூ.10-க்கு வழங்கும் வகையில், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்படும். இங்கு  பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து காரணமாக சிரமப்படுபவர்களுக்காக கிராமங்களில் சிறப்பு பேருந்து சேவை ஏற்படுத்தப்படும். விவசாய கடன்கள் ரத்து, மின் கட்டணம் குறைப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு வாக்குறுதியும் மிகவும் கவனத்துடன் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.