உலக செய்திகள்

அமெரிக்க சாலை விபத்தில் இந்திய பிஷப் பலி + "||" + Indian bishop killed in US road accident

அமெரிக்க சாலை விபத்தில் இந்திய பிஷப் பலி

அமெரிக்க சாலை விபத்தில் இந்திய பிஷப் பலி
அமெரிக்க சாலை விபத்தில் இந்திய பிஷப் ஒருவர் பலியானார்.
ஷில்லாங்,

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கை சேர்ந்தவர் பிஷப் டொமினிக் ஜலா. அமெரிக்கா சென்றிருந்த இவர், கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடைய அமெரிக்க நண்பரும் பாதிரியாருமான மேத்யூ வெல்லங்கால் இறந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த பாதிரியார் ஜோசப் பரேக்கட் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.


பிஷப் டொமினிக் ஜலா மறைவுக்கு, பிரதமர் மோடி டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதேபோல மேகாலயா மாநில முதல்-மந்திரி கான்ராட் சங்மாவும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.