உலக செய்திகள்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா + "||" + US Homeland Security Minister resigns

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.

மெக்காலினன், கடந்த ஏப்ரல் மாதம்தான் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் டிரம்புக்கு உதவியாக இருந்தார். இருப்பினும், சமீபகாலமாக டிரம்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பதவி விலகியுள்ளார்.


தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட கெவின் விரும்புவதால் பதவி விலகி இருப்பதாகவும், புதிய இடைக்கால மந்திரியை அடுத்த வாரம் அறிவிப்பேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். கெவின் சிறப்பாக பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.