தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம் + "||" + Ayodhya Hearing in Top Court To Enter Final Stage Today

அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்

அயோத்தி வழக்கில்  இறுதிகட்ட விசாரணை இன்று  தொடக்கம்
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட்  6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 17 ஆம் தேதிக்குள் இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிடும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. 

தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கும் வகையில், ஒரு வார தசரா விடுமுறை முடிந்து, இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.  இதற்கிடையே, அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கில் ‘மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதால் பலன் இல்லை’ - முக்கிய மனுதாரர் கருத்து
அயோத்தி வழக்கில் ‘மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதால் பலன் இல்லை’ என முக்கிய மனுதாரர் கருத்து தெரிவித்துள்ளார்.
2. அயோத்தி வழக்கு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் - பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி வழக்கு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளன.
3. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - இன்று முடிவு செய்கிறார்கள்
அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசரமாக கூடி முடிவு எடுக்கிறது.
4. அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட 3 பேருக்கு நீதிமன்ற காவல்
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
5. சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு படிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து
சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு படித்துப் பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் கூறினார்.