மாநில செய்திகள்

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு + "||" + In Maduravayal To the house of Seaman and the Porur office Strong police security

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சீமானின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளுவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது திருச்சியில் சீமான் பேட்டி
திருவள்ளுவரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீமான் கூறினார்.
2. தமிழ்நாடு தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் சீமான் பேட்டி
தமிழ்நாடு தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்று தஞ்சையில், சீமான் கூறினார்.
3. சீமானை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா பேட்டி
சீமானை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
4. ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
ராஜீவ்காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. டெல்லியில் நடந்த சீக்கியர்கள் பேரணியில் சீமான் பங்கேற்பு
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்தும், அங்கு அரசியல் தலைவர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வலியுறுத்தியும் சில சீக்கிய அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று தேச இன ஒற்றுமை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.