மாநில செய்திகள்

குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை பரிசீலியுங்கள் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Group-2 exam New curriculum Consider the cancellation request For the Government of Tamil Nadu Madurai High Court order

குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை பரிசீலியுங்கள் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை பரிசீலியுங்கள் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,

மதுரையைச் சேர்ந்த அப்பாஸ்மந்திரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதில் புதிய பாடத்திட்டத்தின்படி 175 கேள்விகள் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்தும், 25 கேள்விகள் கணித பாடப்பகுதியில் இருந்தும் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் குரூப்-2 தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள 100 தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

அதே போல குரூப்-2 மெயின் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களை பெருமளவில் பாதிக்கும். எனவே குரூப்-2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பாடத்திட்ட முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.