தேசிய செய்திகள்

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி + "||" + History will have a mention of those who opposed abrogation of Article 370: Modi.

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
பார்லி, 

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று அவர் ஜல்னா மற்றும் அகோலா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று பார்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி கூறியதாவது:- காஷ்மீரில் இந்துக்கள் இருந்திருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் ரத்து செய்திருக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லீம் என நீங்கள் பார்க்கிறீர்களா?

இன்னொரு காங்கிரஸ் தலைவர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், நாடு அழிந்துவிடும் என்றார். 3 மாதங்கள் ஆகிவிட்டன. நாடு  அழிந்துவிட்டதா?  காஷ்மீரை நாம் இழந்துவிடுவோம் என்று சொன்னார்கள், நாம் என்ன காஷ்மீரை இழந்துவிட்டோமா? நீங்கள் காஷ்மீர் செல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன். 

370-ரத்துக்கு யார் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை வரலாறு குறிப்பிடும்.  அக்.21 ஆம் தேதி மராட்டிய தேர்தலில், நாங்கள் அனைத்து தேர்தல் வெற்றிச்சாதனைகளையும் முறியடிப்போம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்
சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
2. கொரோனா தடுப்பு பணி மோடி அரசின் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு-ஆய்வில் தகவல்
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்து இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. காஷ்மீரில் ராணுவம் அதிரடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு
காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.
5. இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் - பிரதமர் மோடி
ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.