மாநில செய்திகள்

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை + "||" + Four members of the same family committed suicide

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
விழுப்புரம் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் அரோவில் அருகே உள்ள குயிலாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர்  கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மன உளைச்சலில்  இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடன் பிரச்சினையால் தனது மனைவி மற்றும் மகள்களுடன்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் வசித்து வந்த மக்கள் கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

சுந்தரமூர்த்தி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.