கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம் + "||" + Sarfaraz Ahmed dismissed from Test and T20 captaincy

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,

இங்கிலாந்தில் கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் விலகினார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் கழற்றி விடப்பட்டார்.


இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து (1-2), தென்ஆப்பிரிக்காவுக்கு (0-3) எதிரான டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்தது. இந்த மாதம் தொடக்கத்தில் உள்ளூரில் நடந்த முன்னணி வீரர்கள் இல்லாத இலங்கையிடம் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக 32 வயதான சர்ப்ராஸ் அகமதுவின் கேப்டன் பதவி பறிபோய் இருக்கிறது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலியும், 20 ஓவர் அணியின் கேப்டனாக பாபர் அசாமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை பாபர் அசாம் அப்பதவியில் தொடருவார்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கிலும் சொதப்புவதால் இவ்விரு வடிவிலான போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை. அவர் டெஸ்டில் சதம் அடித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு ஜூலை மாதம் வரை ஒரு நாள் போட்டிகள் இல்லை. அதனால் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அப்பதவியை சர்ப்ராஸ் அகமது தக்கவைப்பாரா? என்பது பிறகு தான் தெரிய வரும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கூறுகையில், ‘ஒரு வீரராகவும், கேப்டனாகவும் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள சர்ப்ராஸ் அகமதுவை நீக்கியது கடினமான ஒரு முடிவு. ஆனால் அவர் பார்ம் மற்றும் நம்பிக்கையை இழந்து தடுமாறுகிறார். அணியின் நலன் கருதியே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். சர்ப்ராஸ் அகமது, தைரியமான, போராட்ட குணமிக்க ஒரு வீரர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - மகேஷ்பூபதி
இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்து கவலைப்படவில்லை என்று முன்னாள் வீரர் மகேஷ்பூபதி தெரிவித்தார்.
2. ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கம்
ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
3. வலைத்தள புகைப்படங்கள் நீக்கம் - நடிகை கஸ்தூரி எதிர்ப்பு
வலைத்தள புகைப்படங்களை நீக்கத்திற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட மர்க்ராம் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம்
சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட பேட்ஸ்மேன் மர்க்ராம் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
5. வறட்சி நிவாரண நிதியில் முறைகேடு: கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
ஒரத்தநாடு அருகே வறட்சி நிவாரண நிதியில் முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.