மாநில செய்திகள்

சென்னையில் லாரிகளில் வழங்கும் தண்ணீரின் விலை உயர்வு + "||" + Price of water supplied through trucks in Chennai increased

சென்னையில் லாரிகளில் வழங்கும் தண்ணீரின் விலை உயர்வு

சென்னையில் லாரிகளில் வழங்கும் தண்ணீரின் விலை உயர்வு
சென்னை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது.
சென்னை,

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது.

அந்த வகையில் 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீர் 435 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 499 ரூபாயாக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 700 ரூபாயிலிருந்து 735 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வணிகரீதியாக தரப்படும் தண்ணீரில் 3 ஆயிரம் லிட்டர் 500 ரூபாய், 6 ஆயிரம் லிட்டர் 735 ரூபாய், 9 ஆயிரம் லிட்டர் 1,050 ரூபாய் மற்றும் 12 ஆயிரம் லிட்டர் 1,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சோனியா காந்தி கண்டனம்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
2. சேலம் அருகே மேட்டுப்பட்டியில் ரூ.19.17 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
3. குடிநீர் வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.
5. மதுபானங்கள் விலை உயர்வு - குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்தது
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்தது.