மாநில செய்திகள்

மதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி + "||" + High Court branch in Madurai allowed Madurai to run its shops till 2 a.m, for two days before Diwali

மதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

மதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி
வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரை,

டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அதிகாலை வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தீபாவளியை முன்னிட்டு வியாபாரிகள் பலர் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதாகவும், தீபாவளிக்கு முந்தைய 25, 26-ஆம் தேதிகள் வெள்ளி, சனிக்கிழமைகள் என்பதால் அவ்விரு நாட்களில் பொருட்கள், ஆடைகளை வாங்கிச் செல்வதற்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இரு நாட்களில் இரவு முழுவதும் வியாபாரம் செய்ய கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி, அதிகாலை 2 மணி வரை மட்டும் கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில்  பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற உத்தரவிட்ட அவர், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - டுவிட்டரில் வாழ்த்தும் வெளியிட்டார்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்தவகையில் அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டின.
2. தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
காரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
3. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. மதுரை- போத்தனூர் அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்காதது ஏன்? பயணிகளை ஏமாற்றி வருவதாக புகார்
மதுரையில் இருந்து பழனி வழியாக போத்தனூர், பாலக்காடுக்கு மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய ரெயில்களை இயக்காமல் ரெயில்வே அமைச்சகம் ஏமாற்றி வருவதாக பயணிகள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
5. மதுரை அருகே பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ. 49 லட்சம் - தங்க நகை கொள்ளை; வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு 2 பேர் கைவரிசை
வீட்டில் தனியாக இருந்த வியாபாரியின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, மயக்க மருந்து கொடுத்து ரூ.49 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.