உலக செய்திகள்

மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் + "||" + 311 Indians were repatriated from Mexico

மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி 311 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ,

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அரசாங்கம், தனது எல்லையில் தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பியிருக்கிறது.

மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மெக்சிகோவிற்கான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து மெக்சிகோ அரசு சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மெக்சிகோவின் பல பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த 311 இந்தியர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று மெக்சிகோவில் இருந்து போயிங் 747 விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இந்தியா வந்துள்ள 311 பேருக்கும் ‘அவசரகால சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை பயன்படுத்தி அவசர காலத்தின் போது இந்தியர்கள் ஒரு வழி பயணமாக இந்தியாவிற்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் 263 பேர், கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
2. ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம்
ரோம் நகரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க தனி விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
3. மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை - ஜெய்சங்கர் தகவல்
மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
4. மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் பெரும் வன்முறை: 60 பெண்கள் காயம்
மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில், 60 பெண்கள் காயமடைந்தனர்.
5. ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்
ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர் என விமானப் போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.