தேசிய செய்திகள்

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஸ் கோயல் சொல்கிறார் + "||" + Nobel Prize announced Abhijit Banerjee is a left-wing thinker - Says piyush goyal

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஸ் கோயல் சொல்கிறார்

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஸ் கோயல் சொல்கிறார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
புனே,

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டப்லோ உள்பட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் வர்ணித்துள்ளார்.


புனேயில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறுகையில், ‘நோபல் பரிசு வென்றதற்காக அபிஜித் பானர்ஜியை வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முழுவதும் இடதுசாரி சார்ந்தவை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஸ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.

முன்னதாக இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அபிஜித் பானர்ஜி, நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்றார். அவரது மனைவியும் சேலையில் வந்து அசத்தினார்.
2. பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு: பேசியது என்ன?
பிரதமர் மோடியை அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இருவரும் பேசியது என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.
3. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் தான் படித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார். அங்கு தான் படித்த பல்கலைக்கழகத்தை அவர் பார்வையிட்டார்.
4. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வருகை
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.
5. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.