மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து + "||" + Nanguneri by-election Case for postponement Discount

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து
நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இந்த தொகுதியில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட வலியுறுத்தி அங்குள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் நாங்குநேரி தொகுதி முழுவதும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிகின்றனர்.


மேலும், வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கடந்த 12-ந்தேதி நள்ளிரவில் 30 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்தலை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தற்போது தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிட இயலாது. இதுதொடர்பான புகார்கள் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம். அவர்களே உரிய நடவடிக்கை எடுப்பார் கள், என்றனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதில் என்ன பிரச்சினை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் நேரில் ஆஜராகி, வேட்பாளரிடம் தெரி விக்காமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றார்.

அதற்கு நீதிபதிகள், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்” என்றனர்.

ஆனால் மனுதாரர், “ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓட்டுக் காக பல கோடி ரூபாய் கொடுக் கப்பட்டுள்ளது” என்றார்.

அரசு வக்கீல் ஆஜராகி, “தேர்தலை முறையாக நடத்த அரசு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் கண்காணித்து வருகின்றன. பல இடங்களில் சோதனை நடத்தியதன் விளைவாக இதுவரை ரூ.18 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

விசாரணை முடிவில், நாங்குநேரி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் உரிய முன்னேற்பாடுகளை செய்யும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.