தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் + "||" + Transport Strike Enters Day 15 in Telangana

தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 15 வது நாளாக இன்று நீடித்து வருகிறது.
ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்தார். அந்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

மாநிலம் முழுவது தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் 2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. இதுவரை போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அதனை தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய போராட்டத்திறகு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தனியார் போக்குவரத்து ஊழியர்கள், லாரி, ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் 12 மணி நேரம் நீடித்தது. மாநிலம் முழுவதும் சுமார் 50,000 வாகனங்கள் இன்று ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. 12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அம்மன் கோவிலை இடிக்க எதிர்ப்பு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்
முதலைப்பட்டி குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலை இடிக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
4. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
ஓடை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தரமான தார்சாலை அமைக்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
காசான் கோட்டையில் தரமான தார்சாலை அமைக்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.