தேசிய செய்திகள்

சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு + "||" + Election Commission: 65% voter turnout recorded till 6 pm in Haryana. Voting is still going on, so the turnout is likely to rise.

சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு

சட்ட மன்ற தேர்தல்:அரியானாவில் 65 %,மராட்டியத்தில் 60.5 % வாக்குகள் பதிவு
மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 %, மராட்டியத்தில் 60.5 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மும்பை,

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு  நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற போதிலும், 6 மணிக்கு முன்பே வந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

மாலை 6 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 60.5 சதவீத வாக்குகளும், அரியானாவில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குகள் சில இடங்களில் இன்னும் பதிவாவதால், வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை 28-ந் தேதி திறக்க அனுமதி -மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை வருகிற 28-ந்தேதி முதல் திறக்க அனுமதி அளித்து மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனாவுக்கு இதுவரை 54 போலீசார் பலி
மராட்டிய மாநிலத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.
3. கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. நெல்லை - தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு கொரோனா; தூத்துக்குடியில் 8 பேர் பாதிப்பு
நெல்லை, தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.