மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீத விவரம் வெளியீடு + "||" + Election Commission of India: 69.44% voter turnout recorded till 6 pm in Vikravandi

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீத விவரம் வெளியீடு

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீத  விவரம் வெளியீடு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 84.36% வாக்குகள் பதிவாகியுள்ளன
சென்னை,

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. 

நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள்.  வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.  

விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தமாக 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.