தேசிய செய்திகள்

அமித் ஷாவின் 55-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Prime Minister Modi wishes Amit Shah on his 55th birthday

அமித் ஷாவின் 55-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

அமித் ஷாவின் 55-வது பிறந்தநாள்: பிரதமர்  மோடி வாழ்த்து
அமித் ஷாவின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் 1964 ஆம் ஆண்டு இதேநாளில் பிறந்த அமித் ஷா, தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சரவையில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் அமித் ஷாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

சிறந்த நிர்வாகி மற்றும் கடின உழைப்பாளி என்று அமித் ஷாவை அவர் பாராட்டியுள்ளார். நாட்டை வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதில் மதிப்புமிக்க பங்காற்றி மத்திய அரசில் அமித் ஷா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்தநாள்: பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
2. ஜெயலலிதா பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
3. ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது - திருமாவளவன் பேட்டி
ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
4. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைபிடிப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.
5. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டும், அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கியும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் பகுதியிலும் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியரின் தேர்வுகள்...