தேசிய செய்திகள்

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு + "||" + Telangana: Man booked for writing AP CM JAGAN' on car number plate

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
தெலுங்கானாவில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயரை வைத்த காரை ஓட்டிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.

அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இதில், வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் போலீசார் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரியின் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மூலனூர் அருகே சம்பவம்: புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
புதுப்பெண்ணை கொன்று உடலை அமராவதி ஆற்றின் கரையோரம் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவர் கொலை: தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சாவு மேலும் 2 பேர் கைது
கார் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆத்தூரில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது
ஆத்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன் றவரை போலீசார் கைது செய்தனர்.
4. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது டீக்கடை தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
அருப்புக்கோட்டையில் மதுரை பேரையூரை சேர்ந்த டீக்கடை தொழிலாளியை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
5. மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக - பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-