மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது + "||" + The Mettur Dam has reached 120 feet

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
சேலம்,

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக நீடித்து வந்த தொடர் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் நிறைந்தது.  இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.  இது கடந்த 2 மாதங்களில் 3வது முறையாகும்.

மேட்டூர் அணை வரலாற்றில் கடந்த 86 ஆண்டுகளில் 44வது முறையாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  அணை நிரம்பிய நிலையில் அதில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படும்.  இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  கரையோர பகுதி மக்கள் நீர் வெளியேறும் பகுதியில் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
2. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
3. தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
5. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது
40 ஆண்டுகளுக்குப் பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.