தேசிய செய்திகள்

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ! + "||" + Tamilisai Soundararajan dances with tribal people: Video!

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ!

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை:  வீடியோ!
தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை தொடங்குவதற்கு முன்னதாக, கவர்னர் மாளிகைக்கு வந்திருந்த பழங்குடியினப் பெண்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். இதன் பின்னர் அவர்,  அப்பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.

பழங்குடியின பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப அப்பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு நடனமாடிய காட்சிகளை தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அப்பதிவில், பழங்குடியினப் பெண்களுடன் நடனமாடியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடு இந்தியா’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக இந்தியா உள்ளது’ என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
2. “பெண்களை பூத்து குலுங்க விடுங்கள்” மேடையில் கண் கலங்கிய தமிழிசை சவுந்தரராஜன்
பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
3. அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்
அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
4. குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச நடனம்
குஜராத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்து கர்பா நடனம் ஆடப்பட்டது.
5. பாசமிகு சகோதரி’ என்பதே எனக்கு பிடித்த பட்டம்: ‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ என்றும், ‘பாசமிகு சகோதரி என்பதே எனக்கு பிடித்த பட்டம்’ என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.