மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy rain likely in Tamil Nadu over the next 24 hours - Chennai Meteorological Department

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவ மழை : சென்னையில் 14 செமீ குறைவு ; தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகம்
சென்னையில் வடகிழக்கு பருவ மழை 14 செமீ குறைவாக பெய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமாக பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.
2. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
4. சென்னையில் பரவலாக கனமழை; வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
5. சென்னை, கடலூர், நாமக்கல் பகுதிகளில் கனமழை
சென்னை, கடலூர் மற்றும் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.