தேசிய செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு - கேரள அரசு அறிவிப்பு + "||" + Traffic violation penalty reduced - Kerala Govt

போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு - கேரள அரசு அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைப்பு - கேரள அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பாதியாக குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,

அண்மையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இதனால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம் என்று அந்த மசோதாவில் உள்ளது.

இதனையடுத்து கேரள அரசு வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை பாதியாக குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அது பாதியாக குறைக்கப்பட்டு ரூ.500 அபராதம் வசூலித்தால் போதும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் ரூ.10 ஆயிரமாக இருந்த அபராத தொகை ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அதிகவேகமாக சென்றால் ரூ.5 ஆயிரமாக இருந்த அபராத தொகை ரூ.1500- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது, சிறுவர்களுக்கு விதிக்கப்படும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை குறைக்க கருணை காட்ட முடியாது என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு அவரது சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
2. சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3. கடமான் கறி சமைத்த விவகாரம்: மேலும் 6 பேருக்கு 1¼ லட்சம் அபராதம்
கடமான் கறி சமைத்த விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. திருப்பூரில் கொசுப்புழு இருந்ததால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றம்
திருப்பூரில் டெங்கு கொசுப்புழு இருப்பதாக கண்டறியப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடமும் இடித்து அகற்றப்பட்டது.
5. நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-