தேசிய செய்திகள்

காஷ்மீரில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த 5 தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை + "||" + 5 Labourers From Bengal Killed By Terrorists In Kashmir's Kulgam

காஷ்மீரில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த 5 தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த 5 தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த 5 தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று, மேற்கு வங்காள தொழிலாளர்கள் 5 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். நேற்று முன் தினம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், வெளிமாநிலத்தைச்சேர்ந்த டிரக் ஓட்டுநரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 

தொடர்ந்து வெளி மாநிலத்தவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, அங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பம் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றார். 

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்ய, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு அங்கு சென்றுள்ள சூழலில், பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு
காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. காஷ்மீரில் ராணுவம் அதிரடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு
காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.
4. காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து: 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் திருத்தம்
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து: 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் திருத்தம்

ஆசிரியரின் தேர்வுகள்...