தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல் + "||" + Fadnavis may take oath by Friday despite Shiv Sena spat

தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்

தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்
தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், இருகட்சிகளின் பலம் 161 ஆக இருப்பதால், அந்த கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவியிலும் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பாக அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறினார். ஆட்சியில் சமபங்கு தொடர்பாக பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மும்பை ஒர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்ற நிலையில், அவரை முதல்-மந்திரியாக்க சிவசேனா விரும்புகிறது.

சிவசேனா கோரிக்கை தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் மவுனம் காத்து வந்த நிலையில், நேற்று முதன் முறையாக அப்படி ஒரு ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கு இடையே செய்யப்படவில்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்கமாக நிராகரித்தார். அடுத்த 5 ஆண்டுகளும் நான் தான் முதல்-மந்திரியாக நீடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். முதல்-மந்திரியின் அறிவிப்பை அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு பா.ஜனதாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்தது.

தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வரும் சூழலில்,  தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் மந்திரியாக பதவியேற்க கூடும் என்று கூறப்படுகிறது.  மேலும், தற்போது கருத்து வேறுபாடு நிலவினாலும் ஆட்சி அமைத்த பிறகு சிவசேனா எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி
சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2. பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்தது என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றிபெற்றது.
4. பால் தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது : மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே
பால்தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
5. பா.ஜனதா கூட்டணியில் நவநிர்மாண் சேனா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவும் சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.