தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் சந்தேகம்? + "||" + Questions grow over NGO’s invitation to European Union parliamentarians

காஷ்மீருக்கு ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் சந்தேகம்?

காஷ்மீருக்கு ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் சந்தேகம்?
ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு அழைப்பு விடுத்ததில் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370  கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி  ரத்து செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

பின்னர் இவர்கள் துணை ஜனாதிபதி  வெங்கய்யா நாயுடு,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து பேசினர். அவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.   

பெரும்பாலும் இந்த  எம்பிக்கள்  தீவிர வலதுசாரி அல்லது வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில்  இந்த எம்பிக்கள் குறித்து  கேள்விகள் எழுந்து உள்ளது.   இவர்களில் 23 பேர் மட்டுமே காஷ்மீர் பயணம் செய்தனர்.

கள நிலவரம் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் அடங்கிய குழு நேற்று  ஆய்வு செய்தது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்  இங்கிலாந்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர், காஷ்மீரை பார்வையிடும் ஐரோப்பிய தூதுக்குழுவிலிருந்து விலகி இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ரத்து செய்து சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக லண்டன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது காஷ்மீர் விஜயத்தில் பாதுகாவல் துணையின்றி மக்களை சந்திக்க விருப்பம் என்ற சிறிய விளக்கத்துடன் அவர் இந்தியாவின் அழைப்பை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைப்போன்று மேலும் 3 பேரும் அவ்வாறே அழைப்பை ரத்துசெய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

தூதுக்குழுவுடன் வந்த  மேடி சர்மா மகளிர் பொருளாதார மற்றும் சமூக சிந்தனை  அமைப்பு என்ற ஒரு அரசு சாரா அமைப்பை   நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.  இருப்பினும் அரசாங்கத்துடனும், பிரதமர் அலுவலகத்துடனும்  அவர் கொண்டிருந்த தொடர்பு  குறித்து தெளிவாக தெரியவில்லை. இவர் தான் இந்த எம்பிக்களை அழைத்து வந்து உள்ளார்.

இதற்கு இடையில், இங்கிலாந்தின்   லிபரல் டெமக்ராட் கட்சியின் (எல்.டி.பி) இரண்டு எம்.பி.க்கள் இந்த பயணத்தின் போது உள்ளூர் காஷ்மீர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடையின்றி அணுகுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து அவர்கள் இந்த பயணத்தில் இருந்து  விலகவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.