மாநில செய்திகள்

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் என்றும் நீங்காது -முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் + "||" + Mutharalinga Deva's service will never last in the minds of the people Chief Minister Palanisamy tribute

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் என்றும் நீங்காது -முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் என்றும் நீங்காது -முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்
முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் என்றும் நீங்காது என்று முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. 1979-ம் ஆண்டு முதல் தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றார்.