உலக செய்திகள்

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்- பாக். மந்திரி சர்ச்சை பேச்சு + "||" + Countries Backing India On Kashmir "Will Be Hit By Missile": Pak Minister

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்- பாக். மந்திரி சர்ச்சை பேச்சு

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்- பாக். மந்திரி சர்ச்சை பேச்சு
இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் மீது மந்திரி பேசியது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்,

காஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

காஷ்மீர்  மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் விவகாரங்களுக்கான மந்திரி அலி அமின் கந்தாபூர், இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டரில், இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் மந்திரி கூறியிருப்பதாவது:-

 “ காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்தால், போருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளும் எங்களுக்கு எதிரி நாடுகளே. எனவே அந்த நாடுகள் மீதும் நாங்கள் ஏவுகணைகளை வீசுவோம்” எனக் கூறுகிறார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல முயன்று தோற்றுப்போன பாகிஸ்தான் இந்தியா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற கருத்தை சார்க் நாடுகள் உள்பட உலகின் பல நாடுகள் ஆதரித்துள்ளன. அரபு நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளதால், கடும் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தொடர்பை ஒரு தலைபட்சமாக துண்டித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
2. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
4. ஐ.நா.சபைக்கு இந்தியா ரூ.115 கோடி நிதி - இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்
ஐ.நா.சபையுடனான வளர்ச்சி கூட்டு நிதிக்காக ரூ.115 கோடி நிதியை இந்திய தூதர் திருமூர்த்தி வழங்கினார்.
5. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.