மாநில செய்திகள்

மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ, அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம் - ராதாகிருஷ்ணன் + "||" + We tried to recover Sujit by all means Revenue Administration Commissioner Radhakrishnan

மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ, அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம் - ராதாகிருஷ்ணன்

மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ, அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம் - ராதாகிருஷ்ணன்
மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

துர்நாற்றம் வீசியதால் தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித்தின் உடல் எடுக்கப்பட்டது.  பேரிடர் மீட்பு குழுவின் வழிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது. போர்வெல் என்பது விபத்து தான், பேரிடர் அல்ல, சுஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது. 

மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம். ஆழ்துளை கிணறு சம்பவங்களில் இறந்தவரின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன. 

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற கணிப்பு உள்ளது.  மாநில, தேசிய மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலில் உள்ள 5 படகுகளில் 2 படகுகளின் மீனவர்கள் தொடர்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.