கிரிக்கெட்

'சகோ... இந்த தொடரில் ஏதாவது இருக்கிறதா?' ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல் + "||" + Bro anything in this series Bookie's conversation with Shakib released

'சகோ... இந்த தொடரில் ஏதாவது இருக்கிறதா?' ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

'சகோ... இந்த தொடரில் ஏதாவது இருக்கிறதா?' ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்
'சகோ... இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல் விவரங்களை ஐசிசி வெளியிட்டு உள்ளது.
டாக்கா

வங்காள தேச  கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (வயது 32), வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த இரு நாட்களாக வங்காளதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை.  அவருக்கு தடை விதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், அவரை இடைத்தரகர்கள் அணுகியது பற்றி உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றை ஐ.சி.சி. விதித்துள்ளது.  இதனால் அவர் 2 வருட காலத்திற்கு அணியில் விளையாட முடியாது.  இந்தியாவில் நடைபெற உள்ள தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

ஊழல் எதிர்ப்பு இடைநீக்கத்தைத் தொடர்ந்து எம்.சி.சி உலக கிரிக்கெட் குழுவிலிருந்து ஷாகிப் அல் ஹசன் விலகினார். ஷாகிப் அல் ஹசன் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

எம்.சி.சி உலக கிரிக்கெட் கமிட்டியுடன் அல் ஹசன் விலகியிருப்பதை மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அந்த கிளப் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு முன்பு அல் ஹசனை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியுள்ளார்.  இது குறித்த விவரங்களை ஐசிசி வெளியிட்டு உள்ளது.

'சகோ...  இந்தத் தொடரில் ஏதாவது இருக்கிறதா?' என ஷாகிப்  அல் ஹசனுடன்  புக்கியின் உரையாடல் செல்கிறது.

தீபக் அகர்வால்  மற்ற இரண்டு புக்கிகள்  வங்காள தேச  பிரீமியர் லீக்கின் போது ஷாகிப்  அல் ஹசனை அணுகி உள்ளனர். அதைத் தொடர்ந்து 2018 ஜனவரியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் போதும் அணுகி உள்ளனர்.

ஜனவரி 19, 2018 அன்று,வங்காள தேசம், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட முத்தரப்பு தொடரில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை அகர்வாலிடமிருந்து ஷாகிப் பெற்றார். புக்கி அதைப் பின்தொடர்ந்து  மற்றொரு செய்தியுடன் "நாம் இதில் வேலை செய்கிறோமா அல்லது ஐபிஎல் வரை காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

அகர்வால் பிட்காயின்கள், டாலர் கணக்குகள் குறித்து ஷாகிப்பிற்கு செய்தி அனுப்பினார், மேலும் அவரிடம் கணக்கு விவரங்களைக் கேட்டார். இந்த உரையாடலின் போது, ​​அவரை "முதலில்" சந்திக்க விரும்புவதாக ஷாகிப் அகர்வாலிடம் கூறி உள்ளார்.