மாநில செய்திகள்

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம் + "||" + Why is Sujit's body not exposed? Revenue Administration Commissioner Description

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்
குழந்தை சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளின் சடலங்களை நேரடியாகக் காட்டியதற்கான விமர்சனங்களை அனைவரும் எதிர்கொண்டோம். அதன்பிறகு சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது. அதைப் பின்பற்றினோம். அதைவிடுத்து, என்னென்ன பாகங்கள் இருந்தன, இல்லை என நாங்கள் சொன்னால், இந்த விதிமுறைகளின் அடிப்படையில் எங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புண்டு.

சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேல் இந்த விஷயத்தில் விளக்கமளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்தச் சம்பவம் பேரிடர் இல்லை, விபத்து. அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றினோம். என்ஐடி மண்ணியல் நிபுணர் உடனிருந்துதான் இதனைச் செய்தோம். சிலர் யூகத்தில் சொல்கின்றனர். 24 மணிநேரமும் தொலைக்காட்சியில் காட்டிய ஆழ்துளைக் கிணறு மக்களுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. மனிதனால் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. திறந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்றப்பட வேண்டும்," என கூறினார்.