தேசிய செய்திகள்

பீரங்கி படைப்பிரிவில் வேலை: 63 இடங்களுக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர் + "||" + Nashik: 30,000 turn up for army recruitment rally to fill 63 vacant posts in artillery regiment

பீரங்கி படைப்பிரிவில் வேலை: 63 இடங்களுக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்

பீரங்கி படைப்பிரிவில் வேலை: 63 இடங்களுக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்
நாசிக்கில் நடைபெற்ற பீரங்கி படைப்பிரிவிற்கு ஆள் எடுக்கும் முகாமில் 63 இடங்களுக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்.
நாசிக் 

மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரில் இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவிற்கு ஆள் எடுக்கும் முகாம் நடைபெற்றது. மொத்தம் 63  இடங்களுக்கான இந்த ஆள் எடுக்கும் முகாமில் சுமார் 30 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் கூடியதால் முகாவில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதி  10-12 ஆம் வகுப்பு ஆகும். இருப்பினும், ஆள் சேர்ப்பு முகாமில் பல  பட்டதாரிகள் முதுகலை பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

சிப்பாய் - பொது வேலை, சிகையலங்கார நிபுணர், மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற பதவிகளை நிரப்ப இராணுவத்தால் ஐந்து நாள் ஆட்சேர்ப்பு முகாம்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாத தொடக்கத்தில், ஸ்ரீநகரில் ஒரு பிராந்திய இராணுவ பட்டாலியனுக்கான ஆள்சேர்ப்பு முகாமிற்கு இராணுவம் ஏற்பாடு செய்தது, இதில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 6,500 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.