சினிமா செய்திகள்

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள் + "||" + Noorin Shereef injured during programme; crying video circulated on social media

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்

கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்
சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க வந்த நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள். அவர் மேடையில் அழுதார்.
மலப்புரம், 

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பெற்ற பாடல் காட்சியின் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் பிரபலமானார்.

இதே பாடல் காட்சியில் இடம் பெற்ற மற்றொரு நடிகை நூரின் ஷெரீப்பும் பிரபலமாகி இருந்தார்.  படத்தில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து  நூரின் ஷெரீப்புக்கும் அதிக படவாய்ப்புகள் அமைந்தது.  

இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் புதிய சூப்பர் மார்க்கெட்டை  திறந்து வைக்க நூரின் அழைக்கப்பட்டு இருந்தார்.

மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள்  நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். நூரின் வந்ததை பார்த்த உடன் அவரின் காரை சுற்றி வளைத்து சத்தம் போட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகபட்டது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார். வலியை பொறுத்துக் கொண்டு விழாவில் கலந்து கொண்டார்.

தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.

ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாயார்  கூறியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு நூரின் வந்தபோது, சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நூரின் மூக்கில் ரத்தம் கொட்டுவது அவர் கதறி அழுவது சமூக வலை தளங்களில் வைரல் ஆகிஉள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ராகுல் பிரித்தி சிங் ...சரிவருமா...?
தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
2. நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கு: காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.
3. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
4. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
5. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்