தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து நிறைவு + "||" + Sensex closes above 40,000 mark, Nifty PSU bank gains 3.7 pc

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து நிறைவு

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து நிறைவு
மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 40 ஆயிரம் புள்ளிகளை கடந்திருந்தது.
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபொழுது சென்செக்ஸ் குறியீடு 40 ஆயிரம் புள்ளிகளை கடந்திருந்தது.  கடந்த ஜூலை 5ந்தேதிக்கு பின்பு முதன்முறையாக இந்த உயர்வை சென்செக்ஸ் எட்டியுள்ளது.

இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 220 புள்ளிகள் அல்லது 0.5 சதவீத உயர்வு கண்டு 40,052 என்ற புள்ளிகளுடனும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 57 புள்ளிகள் உயர்வடைந்து 11,844 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.

நிப்டி பி.எஸ்.யூ. வங்கியானது 3.7 சதவீத லாபத்துடன் காணப்பட்டது.  பங்குகளில் கெயில் நிறுவனம் 6.3 சதவீதம் என்ற அதிக அளவு லாபம் எட்டியது.

ஆற்றல் தேவைகளை முன்னிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்பில் 100 பில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்யும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.9 சதவீத லாபம் அடைந்திருந்தது.