தேசிய செய்திகள்

அரபி கடலில் மகா புயல் உருவானது + "||" + In the Arabian Sea, a great storm emerged

அரபி கடலில் மகா புயல் உருவானது

அரபி கடலில் மகா புயல் உருவானது
அரபி கடலில் மகா புயல் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

அரபி கடலில் கியார் புயல் உள்ள நிலையில், புதிய புயல் உருவாகி உள்ளது.  இந்த புயலுக்கு மகா என்று பெயரிட்டு உள்ளனர்.  திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறும்.  லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி புயல் நகர்கிறது.  இதனால், புயல் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீ. ஆக இருக்கும்.