தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் + "||" + In the case of Ayodhya Everyone should accept the Supreme Court ruling - R.S.S. Request

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுடெல்லி,

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வருகிற 17-ந் தேதிக்குள் தீர்ப்பு பிறப்பிக்க உள்ளது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஹரித்துவாரில் 5 நாட்கள் நடைபெற இருந்த பேச்சாளர்கள் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது. இதற்கு பதிலாக டெல்லியில் 2 நாள் மூத்த பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.


ஆர்.எஸ்.எஸ். தலைமை செய்தி தொடர்பாளர் அருண்குமார் டுவிட்டரில், “ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வருகிற நாட்களில் கூற உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதனை அனைவரும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.