தேசிய செய்திகள்

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம் + "||" + Why did Rahul Gandhi go abroad? - Congressional interpretation

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்

ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - காங்கிரஸ் விளக்கம்
ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்வுகளில் எதிலும் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ராகுல் காந்தி எதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்? என கேட்கப்பட்டது.


அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். தற்போதும் அதுபோன்ற ஒரு பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்’ என்று கூறினார்.

ராகுல் காந்தி தியானம் செய்வதற்காக இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கலாம் எனவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா
ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,
2. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்
ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை
மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.
4. சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
குலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
5. ஆர்.எஸ்.எஸ்.சின் ஆன்மாதான் பிரக்யாசிங் கருத்து; ராகுல் காந்தி சொல்கிறார்
நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் கூறியது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-