உலக செய்திகள்

பாகிஸ்தான்: ஓடும் ரெயிலில் தீவிபத்து 46 பேர் பலி + "||" + Death toll from train fire rises to 46

பாகிஸ்தான்: ஓடும் ரெயிலில் தீவிபத்து 46 பேர் பலி

பாகிஸ்தான்: ஓடும் ரெயிலில் தீவிபத்து 46 பேர் பலி
பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது  மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது.

காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு  சிலிண்டரை   திறந்த போது  சிலிண்டர் வெடித்தது. இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது. இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 46 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது  டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ரெயிலில் இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்தன. பயணிகள் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்  சமையல் எண்ணெய் இருந்தது. இது தீப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது என கூறினார்.

மீட்பு சேவையின் தலைவர் பகீர் ஹுசைன் கூறும் போது,  பெரும்பாலான மரணங்கள் ரெயிலில் இருந்து குதித்ததால் நிகழ்ந்தன. இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் பயணிகள்  உணவு சமைக்க ரெயில்களில் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை மறைத்து எடுத்து செல்கிறார்கள்.

நீண்டகால முதலீடுகளின் கீழ் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக பாகிஸ்தான் காலனித்துவ ஆதிக்க கால ரெயில்வே நெட்வொர்க்கே இயங்கி வருகிறது.

ஜூலை மாதம் நடந்த விபத்தில் 11 பேரும், செப்டம்பர் மாதம் நடந்த மற்றொரு விபத்தில் நான்கு பேரும் பலியாகி உள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் சிந்து மாகாணத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ரெயில் மீது  மற்றொரு ரெயில் மோதியதில் சுமார் 130 பேர் பலியானார்கள்.