மாநில செய்திகள்

மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் + "||" + Tamil Nadu is unaffected by the Mahastorm

மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அரபிக்கடலில் உருவான கியார் மற்றும் மஹா புயல்கள் ஓமன் நாட்டை நோக்கி செல்கிறது என தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மஹா மற்றும் கியார் புயல்களின் நகர்வு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை அளவை பொறுத்து பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மஹா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை. நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை