உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி + "||" + Philippines Struck by Second Big Earthquake in Three Days

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள்.
மின்டனா

பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 22 கி.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளது.

திடீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதில் ஓட்டல், அலுவலக கட்டிடங்கள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக துலுனான் நகரில் 7  பேர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்சில் எரிமலை குமுறல் காரணமாக, 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
4. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
5. பிலிப்பைன்ஸில் ‘உர்சுலா’ புயல் தாக்குதல்: பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘உர்சுலா’ புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.