மாநில செய்திகள்

மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் - மருத்துவர்கள் அறிவிப்பு + "||" + We will not undergo an autopsy tomorrow

மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் - மருத்துவர்கள் அறிவிப்பு

மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் - மருத்துவர்கள் அறிவிப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
திருச்சி,

திருச்சியில் அரசு  மருத்துவமனையில் நோயாளிகள் செல்லக்கூடிய பாதையான படிக்கட்டை அடைத்து மருத்துவர்கள்  போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் திருச்சி அரசு  மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனையில்  ஈடுபட மாட்டோம் என  மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தி வரும்  600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையிலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

முதலமைச்சரும், அமைச்சரும் எச்சரிக்கை விடுத்தும் போராட்டம் தொடர்வதால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடமாக அறிவிக்கப்படும் என விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.