தேசிய செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் - பிரியங்கா காந்தி விமர்சனம் + "||" + Sardar Patel's enemies are forced to revere him the Congress general secretary Priyanka Gandhi

சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் - பிரியங்கா காந்தி விமர்சனம்

சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் -  பிரியங்கா காந்தி விமர்சனம்
மாபெரும் தலைவர் சர்தார் வல்லபாய் படேல் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு தானே ஆக வேண்டும் என பாஜகவை பிரியங்கா காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல்.  படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.  சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  வல்லபாய் படேலின் சிலைக்கு இன்று காலை பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் சார்பிலும், பாஜக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில்  ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்தியா கேட் முதல் ஷாஜஹான் சாலை வரை 1.5 கி.மீ. வரை நடந்த இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு படேலின் படம் அச்சிடப்பட்ட டி ஷர்ட் வழங்கப்பட்டது. இந்த ஓட்டத்தை உள்துறை மந்திரியும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், பாஜகவின் இந்த கொண்டாட்டம் பற்றி உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சர்தார் வல்லபாய் படேல் உண்மையான காங்கிரஸ் தலைவர். காங்கிரசின் கொள்கையை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர். முன்னாள் பிரதமர் நேருவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர். ஆனால் இன்று பாஜக அவரை தனதாக்கிக் கொள்ள முயலுகிறது.

சர்தார் படேலுக்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் கட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள், சிறந்த மனிதர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர்களே. அதனால் காங்கிரஸ் தலைவர்களை அபகரித்துக்கொள்ள பாஜக முயலுகிறது. 

சர்தார் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்கள் முன்னால் எதிரிகள் கூட மண்டியிட்டு ஆக தானே வேண்டும் என பதிவிட்டுள்ளார்.